Home » Flash News » அத்வானியிடம் நலம் விசாரித்த ராகுல்

அத்வானியிடம் நலம் விசாரித்த ராகுல்

புதுடெல்லி, மார்ச் 13: பிஜேபியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான எல்.கே.அத்வானியிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படத்தி உள்ளது.

சென்ற ஒரு வாரமாக நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்ற போதிலும் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக அவை நடவடிக்கைகள் முடங்கின.
இந்த நிலையில் நேற்று காலை மக்களவைக்கு முன்கூட்டியே வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆளும் கட்சி வரிசையில் முன்னாள் துணை பிரதமரும், மூத்த பிஜேபி தலைவர்களுள் ஒருவருமான எல்.கே.அத்வானி முன்வரிசையில் தனியாக அமர்ந்திருப்பதை கண்டார்.

உடனே ராகுல் அத்வானியை நோக்கி சென்றார். இரு கைகளையும் கூப்பி வணக்கம் தெரிவித்தார். அத்வானியும் அவருக்கு வணக்கம் தெரிவித்தார். அத்வானியின் உடல் நலம் பற்றி ராகுல் விசாரித்தது கேட்டது. என்னுடைய உடல் நலம் நன்றாகத்தான் இருக்கிறது.

இந்த அவைதான் நடைபெறாமல் முடங்கி இருக்கிறது என்று கூறினார். அத்வானியுடன் பேசி விட்டு சபாநாயகரையோ, பிரதமரையோ பார்க்காமல் அவையின் மறுமுனையில் உள்ள தனது இருக்கைக்கு ராகுல் சென்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*