Home » Flash News » ஆன்மிக பயணத்திற்கு பின் அமெரிக்கா செல்கிறார்

ஆன்மிக பயணத்திற்கு பின் அமெரிக்கா செல்கிறார்

தர்மசாலா, மார்ச் 13: இமயமலையில் தற்போது ஆன்மிகப் பயணத்தில் உள்ள ரஜினிகாந்த் அதை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியதும் மீண்டும் அமெரிக்கா செல்ல இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 10-ம் தேதி இமயமலைக்கு புறப்பட்டுச் சென்றார். சென்னையில் இருந்து விமானம் மூலம் இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவுக்குச் சென்றவர், அங்கிருந்து தர்மசாலா, ரிஷிகேஷ் சென்றார். இந்தப் பயணத்தில் தனது முக்கிய வழிகாட்டிகளை சந்தித்து ஆசி பெற்று வருகிறார்.

நெடுந்தூரப் பயணம் என்றால் விமானப் பயணத்தையே தேர்வு செய்வார் ரஜினி. ஆனால் இந்த முறை உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு ரெயில் மூலம் பயணம் மேற்கொள்கிறார். ரிஷிசேல் தனது குருநாதர் பாபாஜியின் சீடரை சந்தித்து ஆசி பெற்றார். அவருடன் மலைக்குகைக்கு சென்று பாபாஜியை தரிசனம் செய்தார்.

மேலும், மலைப்பாதையில் நடைபயணமாகவும், குதிரை மீது சவாரி செய்தும் இந்த ஆன்மீக பயணத்தை ரஜினி மேற்கொண்டுள்ளார். இமயமலையில் 10 நாட்கள் தங்க திட்டமிட்டிருப்பதாகவும், அங்கு சென்ற பிறகுதான் எத்தனை நாட்கள் என்பது குறித்து முடிவு செய்யப் போவதாகவும் சென்னை விமான நிலையத்தில் ரஜினிபேட்டி அளித்திருந்தது குறிப்பிடத்க்கது.

இந்த ஆன்மிகப் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பும் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமனத்தை இறுதி செய்துவிட்டு புதிய நிர்வாகிகள் கட்சி பணிகளை விரைவாக மேற்கொள்ள ஆலோசனைகள் வழங்கிவிட்டு அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார்.

வழக்கமாக வருடம்தோறும் மேற்கொள்ளும் முழு உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*