Home » Flash News » ரூ.189 கோடி மதிப்பு திட்டப் பணிகள்

ரூ.189 கோடி மதிப்பு திட்டப் பணிகள்

சென்னை, மார்ச் 13: சென்னை நகரில் ரூ.189 கோடியே 81 லட்சம் மதிப்பிலான நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பிலான 12 திட்டப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.

நகர்ப்புறங்களில் பெருகி வரும் மக்கட்தொகைக்கேற்ப குடிமைப் பணிகளை நிறைவேற்றிக் கொடுப்பது, அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வசதிகளை வழங்குவது உள்ளாட்சி அமைப்புகளின் தலையாய கடமைகளாகும்.

இத்தகைய பணிகளை மேற்கொள்ளும் உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், கழிவு நீரை அகற்றிடவும், பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 16.4.2013 அன்று சட்டமன்றப் பேரவை விதி எண்.110 கீழ் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னை நகருடன் இணைக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பான நொளம்பூர் பகுதியில் கழிவு நீரகற்றும் கட்டமைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். அதன்படி, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் நொளம்பூரில் 28 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாதாள

சாக்கடைத் திட்டம் மற்றும் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் வழங்கும் திட்டம் ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று காணொலிக் காட்சி மூலமாகத் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் சுமார் 28,000 மக்கள் பயன்பெறுவார்கள்.

மேலும், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில், சென்னை, காரம்பாக்கம் பகுதிகளில் 20 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் திட்டம், மதுரவாயல் பகுதிகளில் 60 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாதாள சாக்கடைத் திட்டம்;
என மொத்தம் 189 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 12 திட்டப்பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று துவக்கி வைத்தார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*