Home » குற்றம் » ரூ. 9 லட்சம் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்

ரூ. 9 லட்சம் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்

செங்குன்றம், மார்ச் 12: செங்குன்றம் பகுதியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை மினி லாரியில் ஏற்றிய ஆசாமியை போலீசார் கைது செய்து ரூ. 9 லட்சம் மதிப்புள்ள20 மூட்டை போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- செங்குன்றம் பைபாஸ் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் டாடா ஏசி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.அந்த தகவலின்படி செங்குன்றம் இன்ஸ்பெக்டர் என். ராஜேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் போலீசார் அந்த இடத்திற்கு விரைந்துசென்றனர்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அந்தமினி வேனில் இருந்து மற்றொரு காரை நிறுத்தி அதில் மூட்டை மூட்டையாக ஏற்றினர்.
இதைபார்த்த போலீசார் சுற்றி வளைத்து அதில் தடை செய்யப்பட்ட பான் பராக், மாவா, ஹான்ஸ், குட்கா போன்ற 20 மூட்டை போதைப்பொருட்கள் இருந்தது. தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் 20மூட்டைகள் கொண்ட போதைப்பொருட்கள் மற்றும் அதற்கு பயன்படுத்திய கார், மினிலாரி ஆகியவற்றை பறிமுதல்செய்தனர்.

மேலும் இதில்தொடர்புடைய பாலகணேசன் நகரை சேர்ந்த விஜயராஜி (வயது 43) கைது செய்து பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.கடத்தப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு ரூ.9 லட்சமாகும்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*