Home » சென்னை » குரங்கணி பகுதிக்கு உதவிக்கு வரும் மழை

குரங்கணி பகுதிக்கு உதவிக்கு வரும் மழை

சென்னை, மார்ச் 12: காட்டுத்தீ உருவாகி உள்ள குரங்கணி பகுதியில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் குரங்கணியில் மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று திடீரென காட்டுத்தி பரவத் துவங்கியது. அப்போது அங்கு மலையேற்றத்திற்கு சென்று பலர் சிக்கினர். மேலும் 9 பேர் உயிரிழந்து உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரியவந்துள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தனது பேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்த பதிவில் தெரிவித்திருப்பதாவது: இந்த பகுதியில் நேற்று தான் திடீரென்று தீ ஏற்பட்டுள்ளது. கடந்த 90 நாட்களுக்கு காட்டுத்தீ ஏற்படுவதற்கான எந்த அறிகுறிகளும் தெரியவில்லை.

இந்நிலையில் இலங்கை அருகே பெருங்கடலில் தாழ்வு மையம் உருவாகிறது. இதனால் காட்டுத்தீ ஏற்பட்ட இடத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இந்த மழையால் தீ அணையும் என்று எதிர்ப்பார்க்க முடியாது. சிறிய அளவிலேயே மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*