Home » அரசியல் » காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல்

காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல்

தேனி, மார்ச் 12: குரங்கணி காட்டுத் தீயில்  சிக்கி படுகாயமடைந்த 27 பேருக்கு தேனி மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தேனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தேனி மாவட்டம், குரங்கணி வனப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்காக சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் சென்றுள்ளனர். வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த 27 பேருக்கு தேனி மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோரை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் உடன் சென்றுள்ளார்.
குரங்கணி காட்டுத்தீயில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களின் விவரங்கள் பின்வருமாறு: சென் னையை சேர்ந்த மோனிஷா (வயது 30), பூஜா (வயது 27), சஹானா (வயது 20), நிவேதா (வயது 23), விஜயலஷ்மி (வயது 27), நிஷா (வயது 27), சேலத்தை சேர்ந்த தேவி (வயது 28), திருப்பூரை சேர்ந்த ராஜசேகர் (வயது 29), பாவனா (வயது 12),
சஹானா (வயது 11), ஈரோடை சேர்ந்த நீகா (வயது 9), பிரபு (வயது 30), சபீதா (வயது 35) உள்ளிட்டோருக்கு மருத்துவமனைகளில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இவர்களில், சென்னை போரூரை சேர்ந்த இலக்கியா (வயது 29) 45% காயம், பள்ளிக்கரணையை சேர்ந்த சுவேதா (வயது 28) 50% காயம், தாம்பரத்தை சேர்ந்த அனுவித்யா (வயது 25) 90% காயம், நிவ்யா பிரகதி (வயது 24) 60% காயம், கேரளாவை சேர்ந்த மினா ஜார்ஜ் 60% காயம், ஈரோடை சேர்ந்த திவ்யா (வயது 25) 50% காயம், ஈரோடை சேர்ந்த கண்ணன் (வயது 26) 40% காயம், திருப்பூரை சேர்ந்த சக்திகலா (வயது 40) 70% காயத்துடன் சிகிச்சை பெற்றுவரும் இந்த 8 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*