Home » Flash News » ராஜீவ் கொலையாளிகளுக்கு மன்னிப்பு: ராகுல்

ராஜீவ் கொலையாளிகளுக்கு மன்னிப்பு: ராகுல்

சிங்கப்பூர், மார்ச் 11:ராஜீவ் கொலையாளிகளை மன்னித்துவிட்டேன் என்றும், ஆனால் இந்த விஷயத்தில் கட்சியின் முடிவுக்கு கட்டுப்படுவதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் தெரிவித் துள்ளார்.

மேலும் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் உடலை டிவியில் பார்த்து தாம் வேதனைப்பட்டதாக வும், ஒருவரை துன்புறுத்தி கொல்வ தில் தமக்கு உடன்பாடு இல்லை என்றும் ராகுல் மேலும் தெரிவித்தார்.மலேசியா மற்றும் சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் செய்து வரும் அவர் சிங்கப்பூரில் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ராஜீவ்காந்தி கொலையாளிகளை விடுதலை செய்ய ஜெயலலிதா முடிவெடுத்தபோது காங்கிரஸ் கட்சி அதை எதிர்த்தது. நானும் கட்சியின் முடிவுக்கு கட்டுப்பட்டேன். இருப்பி னும் குற்றம் செய்தவர்களை துன்புறுத்தி கொல்வதை நான் விரும்பவில்லை. இந்த விஷயத்தில் ஆரம்பத்தில் நான் ஆவேசத்தில் தான் இருந்தேன். இப்போது எனது தந்தையின் கொலையாளிகளை தனிப்பட்ட முறையில் நான் மன்னித்துவிட்டேன். ஆனாலும் காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன் என்றார்.

இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி கொலைகளில் தொடர் புடையவர்களை மன்னித்துவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்து உள்ளார். பிரபாகரனின் உடலை தொலைக் காட்சிகளில் பார்த்தபோது, தமது மனத்தில் இருவேறு எண்ணங்கள் உதித்ததாகவும் ராகுல் தெரிவித் துள்ளார். ஒரு மனிதரை இப்படி துன்புறுத்தி கொல்லவேண்டுமா என தாம் எண்ணியதாகவும் அவரது குடும்பம், குழந்தைக்காக தாம் வேதனைப்பட்டதாகவும் ராகுல் குறிப்பிட்டார். தந்தையின் கொலைக்கு காரணமானவர் என்பதற்காக மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை என்பதை தானும், பிரியங்காவும் உணர்ந்ததாக ராகுல் தெரிவித்தார்.

முன்னதாக கோலாலம்பூரில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில், பண மதிப்பிழப்பு கோப்பு நீங்கள் பிரதமராக இருந்து உங்களிடம் வந்திருந்தால் என்ன செய்வீர்கள் என்று ராகுலிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் அந்த கோப்பு என்னிடம் வந்திருந்தால் அதை குப்பையில் தூக்கிவீசியிருப்பேன் என்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*