Home » சினிமா » நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகுமாரி ரூ.5 லட்சம்

நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகுமாரி ரூ.5 லட்சம்

சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் நடிகர் சங்கத்திற்கு பல மாடி கட்டிடம் கட்டும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இதற்கு நிதி திரட்டுவதற்காக கலை நிகழ்ச்சிகள் மற்றும் மலேசியாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

நடிகர், நடிகைகளிடமிருந்தும் தொழில் அதிபர்களிடமிருந்தும் கட்டிட நிதி திரட்டப்பட்டு வருகிறது. விரைவில் கட்டிட பணி நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பழம்பெரும் தமிழ் நடிகை விஜயகுமாரி நடிகர் சங்க கட்டிட நிதிக்காக ரூ.5 லட்சத்தை சங்கத்தின் பொருளாளர் கார்த்தியிடம் வழங்கினார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதாக கூறினார் கார்த்தி கூறினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*