Home » Flash News » நிதி உதவி செய்வது யார்?: கமல் பரபரப்பு

நிதி உதவி செய்வது யார்?: கமல் பரபரப்பு

சென்னை, மார்ச் 11 :நிதி உதவி செய்வது யார் என்பது பற்றிய கேள்விக்கு கமலஹாசன் பதில் அளித்தார். கிறிஸ்தவ அமைப்புகளிட மிருந்து நிதி கிடைக்கிறதா என்று கேட்டபோது, இதைவிட நகைப்புக்குரியது வேறு ஒன்றுமில்லை என்று அவர் கூறினார்.

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நேற்று அத்திக்கடவு – அவினாசி திட்ட போராட்ட குழுவினரை சந்தித்து பேசினார்.
பின்னர் ரசிகர்கள் கூட்டத்தில் பேசிய அவர், மாற்றத்தை ஏற்படுத்துவதற் காகவே அரசியலுக்கு வந்து இருக்கிறேன். அதை செய்து காட்டுவேன் என்று உறுதிபட கூறினார்.

இன்று காலை ஈரோட்டில் பெரியார் வசித்த இல்லத்திற்கு பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் உங்கள் கட்சிக்கு கிறிஸ்தவ அமைப்புகளிடமிருந்து நிதி உதவி கிடைக்கிறா என்று ஒரு நிருபர் கேட்டார். இதற்கு பதில் அளித்த அவர், இதைவிட நகைப்புக்குரியது வேறொன்றுமில்லை என்றார்.

மேலும் அவர் கூறுகையில் தமிழ்நாட்டில் ஆபத்தான பல விஷயங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. மாணவி படுகொலை, ஆய்வாளர் தாக்கியதில் கர்ப்பிணி பெண் உயிரிழந்தது போன்ற சம்பவங்கள் கண்டிக்கத்தக்கது என்றார்.மக்கள் நீதி மய்யத்தின் ஒரே குறிக் கோள் மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதுதான் என்று கூறிய அவர், அரசியலில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தி தீர வேண்டும். இதற்காகவே கட்சி தொடங்கி இருக்கிறேன் என்றார்.

பெரியாரின் கொள்கைகளில் உங்களுக்கு ஈடுபாடு உண்டா? அவரது இயக்க நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டீர்களா என்று கேட்டதற்கு, பெரியார் திடலுக்கு பலமுறை நான் சென்று இருக்கிறேன் என்று கூறினார். சிலைகள் வைப்பதில் தமக்கு கருத்து வேறுபாடு உண்டு என்று கூறிய அவர் பெரியார் கூட தமக்கு சிலை வைக்க விரும்பி இருக்க மாட்டார் என்றார்.ராஜீவ் கொலையாளிகளை மன்னிப்பதாக ராகுல் கூறியிருப்பது அவரது மனிதாபிமானத்தை காட்டுகிறது என்றும் கமல்ஹாசன் மேலும் தெரிவித்தார்.

         

Related Post

One thought on “நிதி உதவி செய்வது யார்?: கமல் பரபரப்பு

  1. ppc says:

    Mr. Kamalhasan has come to the politics at the time of his extreme state of mental disorder…………..ppc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*