Home » விளையாட்டு » மனைவி புகாருக்கு ஷமி மறுப்பு

மனைவி புகாருக்கு ஷமி மறுப்பு

கொல்கத்தா, மார்ச் 8: தன் மீது மனைவி கூறியுள்ள புகார்கள் உண்மையில்லை என்று இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது ஷமி மறுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முகமது ஷமி. உத்தரபிரதேசத்தை சேர்ந்த 29 வயதான முகமது ஷமி தற்போது மேற்குவங்காளத்தில் உள்ள

கொல்கத்தாவில் வசித்து வருகிறார். முகமது ஷமிக்கும், ஹசின் ஜஹன் என்ற பெண்ணுக்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஆயிரா (2.5 வயது) என்ற பெண் குழந்தை உள்ளது.

முகமது ஷமி குறித்து அவரது மனைவி ஹசின் ஜஹன் பேஸ்புக் பக்கத்தில் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு போலீசில் நேற்று முறைப்படி புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர். ஆனால் புகாரில் உள்ள விவரங்களை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர்.

இதற்கிடையே, முகமது ஷமி தன் மீதான புகாரை மறுத்துள்ளார். அவர் கூறும் போது, எனக்கு எதிராக இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. அவைகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை. இது எனக்கு எதிராக நன்கு திட்டமிட்ட சதி.

குற்றச்சாட்டுகளை தூக்கி எறிந்து, தனது தொழில், வாழ்க்கையை அழிக்க எனக்கு எதிராக ஒருவர் சதி செய்கிறார் என்று ஷமி கூறினார். நான் ஹசினைத் தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால் அவர் என் தொலைபேசியை எடுக்கவில்லை. நான் விஷயங்களை விரைவில் தீர்த்துக்கொள்ள நினைக்கிறேன், என கூறினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*