Home » விளையாட்டு » வார்னருக்கு அபராதம் 

வார்னருக்கு அபராதம் 

டர்பன், மார்ச் 8: தென்னாப்பிரிக்க அணி வீரர் குவின்டான் டி காக்குடன் வாக்குவாதம் செய்த ஆஸ்திரேலிய அணி துணை கேப்டன் டேவிட் வார்னருக்கு, போட்டிக்கான ஊதியத்தில் 75 சதவீத அபராதம் விதிக்கப்பட்டது.

டர்பனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் முடிவில் வீரர்கள் அறை அருகே நடந்த இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியதை அடுத்து சர்ச்சை வெடித்தது.

இது குறித்து விசாரணை நடத்திய ஐசிசி போட்டி நடுவர் ஜெப் குரோ, விதிமுறைகளை மீறி கிரிக்கெட் விளையாட்டுக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் நடந்து கொண்ட வார்னருக்கு போட்டிக்கான ஊதியத்தில் 75 சதவீத அபராதம் விதிக்கப்பட்டதுடன், 3 தரக்குறைவு புள்ளிகளும் வழங்கப்பட்டன.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*