Home » விளையாட்டு » தோல்வியில் இருந்து மீளுமா இந்தியா?

தோல்வியில் இருந்து மீளுமா இந்தியா?

கொழும்பு, மார்ச் 8: முத்தரப்பு டி 20 தொடரில் இந்தியா தனது 2-வது லீக் ஆட்டத்தில் இன்று வங்கதேசம் அணியுடன் மோதுகிறது.

தொடக்க போட்டியில் இலங்கையுடன் மோதிய இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

கொழும்பு மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த இப்போட்டியில் டாசில் வென்ற இலங்கை பந்துவீசிய நிலையில், இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன் குவித்தது. தவான் 90, மணிஷ் 37, ரிஷப் பன்ட் 23 ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய இலங்கை 18.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்து வென்றது.

குசால் பெரேரா 66 ரன் (37 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ஆட்ட நாயகன் விருது பெற்றார். கேப்டன் ரோகித் ஷர்மா டக் அவுட்டானதும், ஷர்துல் தாகூர் ஒரே ஓவரில் 27 ரன் விட்டுக் கொடுத்ததும் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தன.

இலங்கை அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது. இந்த நிலையில், இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்கும் 2வது லீக் ஆட்டத்தில் இந்தியா – வங்கதேசம் மோதுகின்றன. முதல் போட்டியில் தோற்றதால், இந்திய அணி கடும் நெருக்கடியுடன் களமிறங்குகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*