Home » விளையாட்டு » கோலிக்கு ரூ.7 கோடி, தோனிக்கு ரூ 5 கோடி: பிசிசிஐ ஒப்பந்தம்

கோலிக்கு ரூ.7 கோடி, தோனிக்கு ரூ 5 கோடி: பிசிசிஐ ஒப்பந்தம்

மும்பை, மார்ச் 8: கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர ஒப்பந்த வீரர்கள் பட்டியலில், முன்னாள் கேப்டன் டோனி ஏ+ கிரேடில் இருந்து ஏ கிரேடுக்கு தள்ளப்பட்டுள்ளார். பிசிசிஐ நேற்று வெளியிட்ட ஒப்பந்த வீரர்கள் விவரம் (அக். 2017 – செப். 2018).

ஏ+ கிரேடு (தலா ரூ. 7 கோடி): விராத் கோஹ்லி, ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பூம்ரா.

ஏ கிரேடு (தலா ரூ.5 கோடி): எம்.எஸ்.டோனி, ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, முரளி விஜய், செதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரகானே, விருத்திமான் சாஹா.

பி கிரேடு (தலா ரூ.3 கோடி): கே.எல்.ராகுல், உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், யஜ்வேந்திர
சாஹல், ஹர்திக் பாண்டியா, இஷாந்த் ஷர்மா, தினேஷ் கார்த்திக்.

சி கிரேடு (தலா ரூ.1 கோடி): கேதார் ஜாதவ், மணிஷ் பாண்டே, அக்சர் பட்டேல், கருண் நாயர், சுரேஷ் ரெய்னா, பார்திவ் பட்டேல், ஜெயந்த் யாதவ். மனைவியின் பரபரப்பு குற்றச்சாட்டுகள் வெளியான நிலையில், வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கான ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அவர் எந்த கிரேடில் இடம் பெற்றுள்ளார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

மூத்த வீரரான யுவராஜ் சிங், இளம் வீரரான ரிஷப் பந்த் ஆகியோருக்கு பட்டியலில் இடம் அளிக்கப்படவில்லை. மாறாக சுரேஷ் ரெய்னாவுக்கு மீண்டும் சம்பள ஒப்பந்த பட்டியலுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் ஏ பிரிவில் இடம் பெற்ற வீரர்களுக்கு அதிகபட்சமாக ரூ.2 கோடி வழங்கப்பட்டிருந்தது. தற்போது இது ஏ பிளஸ் பிரிவாக மாற்றப்பட்டு ரூ.7 கோடியாக சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. இது 350 சதவீத உயர்வாகும். இதே போல் 2வது பிரிவில் இடம் பெற்றுள்ளவர்களின் சம்பளம் 500
சதவீதம் உயர்ந்துள்ளது.

மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளில் உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட வீராங்கனைகளான மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி, ஹர்மான்பிரீத் கவுர், ஸ்மிதி மந்தனா ஆகியோருக்கு தலா ரூ.50 லட்சம் மதிப்பில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*