Home » Flash News » எச்.ராஜாவுக்கு ரஜினி கடும் கண்டனம்

எச்.ராஜாவுக்கு ரஜினி கடும் கண்டனம்

சென்னை, மார்ச் 8: தமிழகத்தில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என்று கருத்து கூறிய எச்.ராஜாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன.

நேற்று முன்தினம் முதல் தமிழகம் முழுவதும் ராஜாவிற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றது. அந்த கருத்திற்கு ராஜா வருத்தம் தெரிவித்த போதிலும், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் என அவருக்கு எதிராக போராடி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்று கூறிய எச்.ராஜாவின் கருத்து காட்டுமிராண்டி தனமானது. இந்த கருத்து கண்டிக்கத்தக்கது.இவ்வாறு ரஜினி பேட்டியளித்தார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*