Home » சினிமா » காதலியை மணமுடித்தார் நடிகர் ரமேஷ் திலக்

காதலியை மணமுடித்தார் நடிகர் ரமேஷ் திலக்

பிரபல நடிகர் ரமேஷ் திலக் தனது காதலி ஆர். ஜே. நவலட்சுமியை இன்று திருமணம் செய்து கொண்டார். சூது கவ்வும், நேரம் ஆகிய படங்களில் கலக்கியவர் ரமேஷ் திலக். இவர் தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.காக்கா முட்டை படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

காலா படத்தில் கூட ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார், இந்நிலையில் இவருக்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இவர் பிரபல வானொலியில் ஆர்ஜேவாக இருந்தார். அப்போதிருந்தே ஆர்.ஜே. நவலட்சுமியை காதலித்து வந்தார். நவலட்சுமி பிரபல சண்டை இயக்குநர் ராம்போ ராஜ்குமாரின் மகளாவார். இவர்களது திருமணம் இன்று நடைபெற்றது. இதில் நடிகை ஸ்ரீபிரியா, நடிகர் நகுல் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*