Home » Uncategorized » கமல் ஒரு மரபணு மாற்றப்பட்ட விதை:ஜெயக்குமார்

கமல் ஒரு மரபணு மாற்றப்பட்ட விதை:ஜெயக்குமார்

சென்னை,பிப்.21:கமல் காகித பூ. பூக்காது, காய்க்காது என்றும் இவர் குறித்து மு.க. ஸ்டாலின் கூறியதை வரவேற்கிறேன் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அறிக்கை ஒன்றில் நடிகர் கமலின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்த மு. க.ஸ்டாலின் காகித பூ மணக்காது என்று தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளித்த கமல், நான் பூ அல்ல., விதை ‘என்னை முகர்ந்து பார்க்காதீர்கள், விதைத்து பாருங்கள், வளர்ந்து வருவேன். நிலத்தில் விதைக்கப்பட்ட விதை என்று பதில் அளித்திருந்தார்.

இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது; தலைவர்களுக்கு உரிய முதிர்ச்சி, தலைமை பண்பு கமலுக்கு இல்லை. அவரது அரசியல் பயணத்தில் எழுச்சியில்லை. காலை 7.30 மணிக்கு பள்ளிக்கு சென்ற ஒரே நபர் கமல் மட்டுமே. எங்களை எதிர்த்தால் தான் கமல் ஹாசன் வெளியில் தெரிய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கமல் ஒரு மரபணு மாற்றப்பட்ட விதை. நடிகர்களின் அரசியல் பிரவேசம் காகித பூ என்ற ஸ்டாலின் கருத்தில் உடன்படுகிறேன். காகித பூ பூக்காது காய்க்காது. பள்ளிக்கூடம் அரசியல் செய்வதற்கான இடம் அல்ல. கமல் பாவம் புரியாத மொழியில் பேசி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

\தமிழக அரசியல் களத்தில், கமல் ஹாசன் போன்சாய் மரம் போன்றுதான் இருக்கமுடியும் வளரமுடியாது என்று பிஜேபி மாநிலத் தலைவர் தமிழிசை சௌவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

பர்மாவில் நடைபெற்ற பொங்கவிழாவில் பங்கேற்ற பிஜேபி மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமானம் மூலம் இன்று சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தமிழிசை கூறியதாவது: பர்மாவில் சுமார் 10 லட்சத்துக்கும் மேலான தமிழர்கள் இன்றளவும் வசித்து வருகிறார்கள். அவர்கள் தமிழகம் வந்து செல்வதற்குவசதியாக, ரங்கூனிலிருந்து சென்னைக்கு நேரடி விமான சேவையை ஏற்படுத்தி தர வேண்டும். இதற்கான அனைத்து முயற்சிகளும் பிஜேபி சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.

நடிகர் கமல் ஹாசனின் அரசியல் பிரவேசம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, நடிகர் கமல் ஹாசனின் அரசியல் பிரவேசத்தை வரவேற்கிறேன். 50 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையில் கஜானாவை நிரப்பிவிட்டு, தற்போது தமிழக மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று கூறி அரசியலுக்கு வந்துள்ளார். தமிழக அரசியல் களத்தில் வருகை தந்துள்ள கமல் ஹாசன், போன்சாய் மரம் போன்றுதான் இருக்கமுடியும், வளர்ச்சியடைய முடியாது என்று தமிழிசை கருத்து தெரிவித்தார். காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழக அரசு கூட்டும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு தமிழிசை வரவேற்பு அளித்துள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*