மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=24191
Export date: Sat Sep 22 16:32:13 2018 / +0000 GMT

பாதாள சாக்கடை தூய்மை பணிக்கு ரோபோக்கள்


திருவனந்தபுரம், பிப்.20: கேரளாவில் பாதாள சாக்கடை தூய்மை செய்யும் பணிக்கு ரோபோக்களை நியமித்து நடைபெற்ற சோதனை முயற்சியில், 4 பாதாள
சாக்கடைகள் வெற்றிகரமாக சுத்தம் செய்யப்பட்டுள்ளன.

கேரளாவில் மு‌தன்முறையாக பாதாளச் சாக்கடை தூய்மை செய்யும் பணிக்கு ரோபோக்களை‌ பயன்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்தது. இந்த நிலையில் கேரளாவில் மு‌தன்முறையாக பாதாளச் சாக்கடை தூய்மை பணிக்கு ரோபோக்களை‌ பயன்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்தது.

ஜென்ரோபோடிக்ஸ் என்ற நிறுவனம் வடிவமைத்த ரோபோ‌க்களை கொண்டு பாதாளச் சாக்கடைகளை தூய்மைப்படுத்தும் பணிகள் நேற்று சோதனை ரீதியாக மேற்கொ‌ள்ளப்பட்டது.

இதில், வெற்றி கிடைக்கும் பட்சத்தில், தொடர்ந்து ரோபோக்களை சாக்கடை தூய்மை பணிக்கு அறிமுகம் செய்ய‌ முடிவு செய்யப்பட்டது. சோ‌தனையின் போது ஒரு ம‌ணி நேரத்தில் 4 பாதா‌ளச் சாக்கடைகளை ரோபோக்கள் தூய்மைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
Post date: 2018-02-20 10:13:32
Post date GMT: 2018-02-20 10:13:32

Post modified date: 2018-02-20 10:25:52
Post modified date GMT: 2018-02-20 10:25:52

Export date: Sat Sep 22 16:32:13 2018 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com