Home » தமிழ்நாடு » இலங்கையில் இருந்து தாயகம் திரும்பும் தமிழக மீனவர்கள்

இலங்கையில் இருந்து தாயகம் திரும்பும் தமிழக மீனவர்கள்

காரைக்கால், பிப்.20: இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட 109 தமிழக மீனவர்கள் இன்று தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 136 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்களில், இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம், நாகை, காரைக்கால், புதுக்கோட்டை மீனவர்கள் இன்று தாயகம் திரும்புகின்றனர்.

காலை 11 மணியளவில் இலங்கை கடற்படையினர் 109 பேரையும் இந்திய கடலோர கடற்படையிடம் சர்வதேச எல்லையில் ஒப்படைத்தனர்.

விடுதலையான 109 மீனவர்கள் மதியம் 3 மணியளவில் காரைக்கால் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு, அங்கிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர். எஞ்சிய 27 மீனவர்கள் சில தினங்களில் விடுவிக்கப்படுவர் என இலங்கை அரசு தகவல் தெரிவித்துள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*