Home » இன்று... » திறந்த காரிலேயே செல்வேன் : கமல்

திறந்த காரிலேயே செல்வேன் : கமல்

சென்னை, பிப். 18:  தமிழக மக்களை சந்திக்க 21-ந் தேதி மிகப்பெரிய பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் திறந்த காரிலேயே செல்வேன் என்றும் நடிகர் கமல்ஹாசன் இன்று சென்னையில் கூறினார்.21-ந் தேதி மதுரையில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அறிவிப்பேன் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

முன்னதாக நேற்று இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவை அவரது இல்லத்தில் சந்தித்த பிறகு கமல்ஹாசன் கூறுகையில், மக்கள் சேவைக்கு தன்னை அர்ப்பணித்து இவ்வளவு நாள் எளிமையாக நம்முடன் வாழ்ந்து கொண்டு இருக்கும் நல்ல தலைவர். அவரிடம் என்னுடைய பயணத்துக்கு உத்தரவு வாங்குவதற்காக வந்தேன். பலரை நான் சந்தித்து வருகிறேன். அந்தவகையில் தான் நல்லக்கண்ணு அய்யாவை பார்க்க வந்தேன் என்றார்.

இன்று காலை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை நடிகர் கமல்ஹாசன் சந்தித்தார்.
அப்போது 21-ந் தேதி மேற்கொள்ள இருப்பது மிகப்பெரிய பயணம். இதற்கு உங்கள் அனைவரின் ஆதரவும் வேண்டும். திறந்த காரிலேயே நான் செல்வேன்.

செவ்வாய்க்கிழமை சென்னையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை ராமநாதபுரம் சென்றுவிடுவேன். எனது சுற்றுப்பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன என்றார்.கமல் பேட்டி அளித்தபோது மாண்டவி, ராஜ்நாராயண் ஆகியோரை நிருபர்களுக்கு அறிமுகப்படுத்தினார். இனி இவர்கள்தான் எனது செய்தி தொடர்பாளர்களாக செயல்படுவார்கள் என்றார்.

இதற்கிடையே, அனுமதியின்றி வைக்கப்பட்ட நடிகர் கமலஹாசனின் பேனர்களை போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.நடிகர் கமலஹாசன் 21-ந் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் தனது அரசியல் சுற்றுப்பயணத்தை மதுரையில் தொடங்கி பிரம்மாண்ட மாநாட்டில் உரையாற்றுகிறார்.

இந்த அறிவிப்புகள் கொண்ட பேனர்களை அவரது இல்லமான ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் அவரது ரசிகர்கள் வைத்திருந்தனர்.இந்த நிலையில் இதனை அறிந்த போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று அந்த பேனர்களை அகற்றினர்.

அப்போது சிலர் அவர்களை தடுக்க முயன்றனர். அப்போது போலீசார் உரிய அனுமதி இல்லாமல் பேனர் வைக்கப்பட்டிருப் பதால் அகற்றுவதாக தெரிவித்து அதனை எடுத்துச்சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*