Home » Flash News » ஜனாதிபதி, பிரதமருடன் ஈரான் அதிபர் சந்திப்பு

ஜனாதிபதி, பிரதமருடன் ஈரான் அதிபர் சந்திப்பு

புதுடெல்லி, பிப்.17: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஈரான் அதிபர் ரவுகானி, டெல்லியில் இன்று ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்தார். நேற்று முன்தினம் ஐதராபாத் வந்தடைந்த அவர், ஐதராபாத்தில் இஸ்லாமிய கல்வியாளர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள் மாநாட்டில் சிறப்புரையாற்றினார்.

நேற்று கோல்கொண்டா பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க குதுப்மினார் அருகேயுள்ள ஷாஹி கோபுரம், மற்றும் உலகப்புகழ் பெற்ற சலர்ஜங் அருங்காட்சியகம் உள்ளிட்ட வரலாற்று சிறப்பு மிக்க நினைவிடங்களை பார்வையிட்டார். சார்மினார் அருகேயுள்ள பிரபல மெக்கா மசூதியில் நடைபெற்ற ‘ஜும்மா’ தொழுகையிலும் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நேற்று மாலை டெல்லிக்கு புறப்பட்டு வந்த ரவுகானி, இன்று ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*