Home » Flash News » ‘நான் உங்கள் கட்சியில் சேர்ந்திருப்பேன்’

‘நான் உங்கள் கட்சியில் சேர்ந்திருப்பேன்’

சென்னை, பிப்.17: எனக்கு உடல்நிலை சரியாக இருந்திருந்தால் நான் உங்கள் கட்சியில் சேர்ந்திருப்பேன் என நடிகர் கமல்ஹாசனிடம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் கூறியுள்ளார்.

காவிரி தீர்ப்பு குறித்து நடிகர் கமல்ஹாசன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதனை தொடர்ந்து நேற்று மாலை முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனை அவரது ராஜா அண்ணாமலைபுரம் இல்லத்தில் நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். சுமார் 15 நிமிடம் இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அதனை தொடர்ந்து வெளியே வந்த கமல்ஹாசன் நிரூபர்களிடம் கூறியதாவது:-

டி.என்.சேஷனிடம் உடல்நலம் விசாரிக்க வந்தேன். நான் முக்கிய பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். கட்சி பணிகளை தொடங்க உள்ளேன். அதற்கு அவருடைய அனுபவ பொழிப்புரையை கேட்பதற்காகவும் வந்தேன். அவர் தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தங்கள் செய்தவர். நிலைத்த தன்மை கொண்டவர். அவர் எந்த பதவி வகித்தாலும் முடிவுகளை அடிபிறழாமல் செய்வார். அவரிடம் எனக்கு என்ன ஆலோசனை செய்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் எதை செய்தாலும் அறம் வேண்டும் என்றார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு வந்தேன் என்றார்.

உங்கள் கட்சியில் டி.என்.சேஷன் பங்களிப்பு இருக்குமா என்று கேட்டதற்கு அவருக்கு உடல்நிலை சரியில்லை என்னிடம் ஒரு நல்ல வார்த்தை சொன்னார். அது மனதிற்கு இதமாக இருந்தது. எனக்கு உடல்நிலை சரியாக இருந்தால் நான் உங்கள் கட்சியில் சேர்ந்திருப்பேன் என்றார். ஏதாவது அறிவுரை தேவை என்றாலோ, சந்தேகம் இருந்தாலோ, என்னிடம் வந்து கேட்குமாறு கூறியதாக கமல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து எம்ஜிஆரின் தனிச்செயலாளராக இருந்த செல்வராஜையும் கமல் சந்தித்து பேசினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*