Home » தமிழ்நாடு » மீனாட்சி அம்மன் கோவிலில் செல்போனுக்கு தடை

மீனாட்சி அம்மன் கோவிலில் செல்போனுக்கு தடை

மதுரை, பிப்.9: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்போன்கள் கொண்டு செல்ல மதுரை உயர்நீதிமன்ற கிளை இன்று தடை விதித்தது. கோவில் பாதுகாப்பு குறித்து தொடரப்பட்ட பொது நலன் மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் செல்போன்களை பக்தர்கள் வைத்து செல்வதற்கு கோவில்களில் தனி இடம் அமைத்து கொடுக்க வேண்டும் என்றும் மீனாட்சி அம்மன் கோவில் பாதுகாப்பை தேசிய பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் கோவில் அருகே உயரமாக கட்டப்பட்ட கட்டிடங்கள் விதிமுறைகளுக்குட்பட்டவையாக இருக்கின்றனவா என்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்ற உத்தரவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*