மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=23510
Export date: Sun May 27 17:38:53 2018 / +0000 GMT

ரஜினி கட்சி தொடக்கம்: மன்ற நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை


சென்னை, பிப்.9:புதிய கட்சியின் பெயர், சின்னத்தை எப்போது வெளியிடுவது என்பது குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ளார். இதில் பொதுமக்கள் இணைவதற்காக ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை துவக்கினார். தமிழகம் முழுவதும் இதில் பலர் ஆர்வமுடன் இணைந்து வருகின்றனர்.தனது கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை ஒரு கோடியை தொட்டப்பிறகு கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அறிவிப்பதாக ரஜினி கூறியிருந்தார்.

தற்போது கணிசமான உறுப்பினர்கள் மன்றத்தில் இணைந்ததையடுத்து கட்சியின் பெயர், சின்னத்தை எப்போது வெளியிடலாம் என்பது குறித்து முக்கிய நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் இன்று கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற மாநில தலைவர் சுதாகரன், மக்கள் மன்ற இணையதள பொறுப்பாளர் ராஜூமகாலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ரஜினி ஆலோசித்ததாக தெரிகிறது. வரும் 13-ம் தேதி மகா சிவராத்திரி அன்றோ அல்லது 15-ம் தேதி மாசி அமாவாசை அன்றோ இது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.
Post date: 2018-02-09 10:52:28
Post date GMT: 2018-02-09 10:52:28

Post modified date: 2018-02-09 10:52:28
Post modified date GMT: 2018-02-09 10:52:28

Export date: Sun May 27 17:38:53 2018 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com