மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=23506
Export date: Thu Jan 17 8:59:51 2019 / +0000 GMT

ஐசிஎப் தொழிற்சங்க தலைவர் பட்டப்பகலில் படுகொலை


சென்னை, பிப்.9: ரெயில்வே தொழிற்சங்க பொதுச்செயலாளர் வெட்டி கொலை செய்யப்பட்டது தொடர்பாக, கார் டிரைவர் உட்பட 3 பேரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.சென்னை பாட்டை சாலை, ஐசிஎப் பகுதியை சேர்ந்தவர் ஜே.கே.புதியவன். இவர், ரெயில்வே தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளராக உள்ளார். இவரது மனைவி ரஞ்சிதா ரெயில்வே ஊழியராக பணியாற்றிவருகிறார். இவர்களுக்கு அனுசியா (வயது 17), நித்யா (வயது 15) என்ற இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், வழக்கம்போல் மனைவி ரஞ்சிதா பணிக்கு செல்ல, இரு மகள்களும் பள்ளிக்கு சென்றுவிட புதியவன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி இன்று காலை 10 மணியளவில் மர்மநபர்கள் வீட்டினுள் புகுந்து புதியவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில், அந்த மர்ம நபர்கள் தாங்கள் எடுத்துவந்த பட்டாக்கத்தியால் புதியவனை சரமாரியாக வெட்டிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பியோடினர். திடீரென எழுந்த அலறல் சத்தம்கேட்டுவந்த அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்த புதியவனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி புதியவன் உயிரிழந்தார். இது குறித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திவரும் ஐ.சி.எப். போலீசார், புதியவன் வீட்டின் அருகேயுள்ள சிசிடிவி கேமிரா பதிவை கைப்பற்றினர். அதில், புதியவனின் கார் டிரைவர் பாஸ்கரன் உட்பட 3 பேர் வீட்டினுள் சென்று வருவதாக பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, தலை மறைவாகியுள்ள கார் டிரைவர் பாஸ்கரன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
Post date: 2018-02-09 10:44:06
Post date GMT: 2018-02-09 10:44:06

Post modified date: 2018-02-09 10:53:25
Post modified date GMT: 2018-02-09 10:53:25

Export date: Thu Jan 17 8:59:51 2019 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com