மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=23503
Export date: Thu Jan 17 8:35:30 2019 / +0000 GMT

ஜெ.மரணம்: விவேக்கிற்கு விசாரணை ஆணையம் சம்மன்


சென்னை, பிப்.9: சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் வரும் 13 அல்லது 14-ந் தேதி ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என்று ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி
விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பி உள்ளது.ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தின் முன் மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் சசிகலாவின் உறவினர்கள் ஆஜராகி சாட்சியமளித்து வருகிறார்கள்.

அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22-ல் சேர்க்கப்படுவதற்கு முன் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் நடந்தது என்ன என்பது குறித்து பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா சாட்சியமளிக்க வேண்டும் என்று நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவிட்டிருந்தார்.இதற்கு வழக்கறிஞர் மூலம் பதிலளித்த சசிகலா தனக்கு எதிராக சாட்சியமளித்தவர்கள் விவரத்தை தனக்கு தர வேண்டும் என்றும், அவர்களை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.

இது காலம் கடத்தும் செயல் என்று விசாரணை கமிஷன் சார்பில் பதில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சசிகலாவின் வழக்கறிஞர்கள் விவாதம் செய்ததை அடுத்து சாட்சியம் அளித்தவர்கள் விவரங்கள் வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் ஜெயலலிதாவிடம் பணியாற்றிய முன்னாள் செயலாளர்கள், உதவியாளர்கள் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் ஐயப்பன் பிப்ரவரி 12-ந் தேதியும், மருத்துவர் பாலாஜி 14-ந் தேதியும், சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன் 15-ந் தேதியும் ஆஜராக உள்ளனர். இந்த நிலையில் விசாரணையின் முக்கிய கட்டமாக சசிகலாவின் அண்ணன் மகனும், ஜெயா டிவியின் தலைமை செயல் அதிகாரியுமான விவேக்குக்கு விசாரணை கமிஷன் இன்று சம்மன் அனுப்பி உள்ளது. அதில் வரும் 13 அல்லது 14-ந் தேதி விசாரணை கமிஷனில் ஆஜராகி
சாட்சியமளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
Post date: 2018-02-09 10:40:07
Post date GMT: 2018-02-09 10:40:07

Post modified date: 2018-02-09 10:40:07
Post modified date GMT: 2018-02-09 10:40:07

Export date: Thu Jan 17 8:35:30 2019 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com