This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export date: Sun Nov 18 7:50:47 2018 / +0000 GMT

சென்னை விமான நிலையம் தனியார் மயமா?


சென்னை,பிப்.9: சென்னை விமான நிலையத்தில் மார்ச் 1-ந் தேதி நிபுணர்கள் குழு ஆய்வு செய்ய இருக்கிறது. இந்த விமான நிலையத்தை தனியார் மயமாக்கும் திட்டத்தின் முதல் கட்டம் என்று கூறப்படுகிறது.
சென்னை திரிசூலத்தில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமானம் நிலையம் அமைந்துள்ளது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் உலக நாடுகளில் இருந்தும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து
செல்கிறார்கள்.

இது குறித்து ஆய்வு செய்வதற்காக நிபுணர்கள் குழு மார்ச் 1-ந் தேதி சென்னை விமான நிலையத்திற்கு வர உள்ளது. உலகத் தரத்திலான வசதிகள் உள்ளனவா என்று பன்னாட்டு, உள்நாட்டு விமான நிலையங்கள், சரக்கு கையாளும் பகுதிகள் ஆகியவற்றை அவர்கள் ஆய்வு செய்ய உள்ளனர்.பயணிகளுக்கு உலகத்தரத்திலான வசதிகள் கிடைக்கின்றனவா என்பதையும் அவர்கள் ஆய்வு செய்ய உள்ளனர்.இந்த நிலையில் சென்னை விமான நிலைய இயக்குனர் சந்திரமவுலி தலைமையில் இன்று காலை ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

கூடுதல் இயக்குனர்கள் ராம்கோபால், ஸ்ரீவத்சவா உள்ளிட்ட 10 அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். விமான நிலையத்தில் எந்தவித வசதி குறைபாடும் இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர்கள் உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது.

நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு சென்னை விமான நிலையத்தை தனியார் வசம் ஒப்படைப்பதா அல்லது தொடர்ந்து இந்திய விமான நிலைய குழுமத்திலேயே நீடிக்கச் செய்வதா என்பது குறித்து முடிவு செய்வார்கள் என்று தெரிகிறது.
Post date: 2018-02-09 10:37:23
Post date GMT: 2018-02-09 10:37:23
Post modified date: 2018-02-09 10:37:23
Post modified date GMT: 2018-02-09 10:37:23
Powered by [ Universal Post Manager ] plugin. HTML saving format developed by gVectors Team www.gVectors.com