மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=23497
Export date: Sat Feb 16 3:32:47 2019 / +0000 GMT

மீனாட்சி அம்மன் தீ விபத்து: கடைகள் அகற்றம்


சென்னை,பிப்.9: தமிழகத்தில் உள்ள கோயில்களின் பாதுகாப்பு தன்மை குறித்து ஆராய மாவட்ட வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் கோயில்களில் விதிமீறி அமைந்துள்ள கடைகளை 3 மாத காலத்திற்குள் வரைமுறைப்படுத்தி அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கக்கூடிய கோயில்களின் பாதுகாப்பு குறித்து சீராய்வு கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறையின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

அத்துறையின் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் கோயில்களை சேர்ந்த சார்நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கடந்த 14.12.2017 அன்று திருச்செந்தூர் கோயிலில் சுற்றுப்பிரகார மண்டபத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து ஏற்பட்ட அசம்பாவிதம் குறித்தும், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 2.2.2018 அன்று வீரவசந்த ராயர் மண்டபத்திற்குள் அமைந்துள்ள கடைகளில் தீப்பிடித்து அசம்பாவிதம் ஏற்பட்டதன் தொடர்ச்சியாக இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில் வளாகங்களுக்குள் உள்ள கட்டிடங்கள் மற்றும் கோயிலை சுற்றி தனியார் மற்றும் கோயிலுக்கு சொந்தமான மனைகளில் உள்ள நிரந்தர, தற்காலிக கட்டிடங்களின் உறுதி தன்மை மற்றும் மின்னியல் உறுதி தன்மை சரிபார்க்கப்பட வேண்டியது குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆய்வு கூட்டத்திற்கு முன்னதாக நிருபர்களுக்கு அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறியதாவது:-தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படக்கூடிய அனைத்து கோயில்களும் ஆகம விதிகளின்படி பூஜைகள் செய்யப்பட்டு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்யப்பட்டு நல்லமுறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
Post date: 2018-02-09 10:34:38
Post date GMT: 2018-02-09 10:34:38

Post modified date: 2018-02-09 10:34:38
Post modified date GMT: 2018-02-09 10:34:38

Export date: Sat Feb 16 3:32:47 2019 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com