மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=23488
Export date: Sun Feb 18 6:46:21 2018 / +0000 GMT

மோடியுடன் டிரம்ப் தொலைபேசியில் பேச்சு


புதுடெல்லி, பிப்.9: பிரதமர் மோடியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் , மாலத்தீவு, ஆப்கான், வடகொரியா உள்ளிட்ட சர்வதேசப் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.அமெரிக்க அதிபர் பிரதமர் மோடியுடன் நடத்திய தொலைபேசி உரையாடல் குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்களை தொடர்வது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாலத்தீவில் நிலவும் அரசியல் நெருக்கடிகள் குறித்தும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு குறித்தும் தலைவர்கள் இருவரும் விவாதித்துள்ளனர்.

மாலத்தீவில் ஜனநாயக ரீதியான நடைமுறைகள் பாதுகாக்கப்படவும் நீதித்துறையின் அதிகாரம் நிலைநிறுத்தப்படவும் இரு தலைவர்களும் வலியுறுத்தி யுள்ளனர். ஆப்கான் பாதுகாப்பில் இந்தியாவும் அமெரிக்காவும் தங்கள் பங்களிப்பை தொடர்ந்து செலுத்தவும் முடிவு மேற்கொள்ளப்பட்டது.
வடகொரியாவில் அணு ஆயுதக் குறைப்பை உறுதி செய்யவும் இந்த பேச்சுவார்த்தையின் போது மோடியுடன் டிரம்ப் ஆலோசனை நடத்தியுள்ளார்.
Post date: 2018-02-09 10:21:10
Post date GMT: 2018-02-09 10:21:10

Post modified date: 2018-02-09 10:21:10
Post modified date GMT: 2018-02-09 10:21:10

Export date: Sun Feb 18 6:46:21 2018 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com