Home » தமிழ்நாடு » நெல்லை கண்காட்சி விற்பனையில் ஹிட்டான விஜய் புத்தகம்

நெல்லை கண்காட்சி விற்பனையில் ஹிட்டான விஜய் புத்தகம்

நெல்லை, பிப். 8: நெல்லை புத்தக கண்காட்சியில் நடிகர் விஜய் பற்றிய புத்தகம் விற்பனையில் சக்கைபோடு போடுவதாக கூறப்படுகிறது. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் விஜய். தமிழ்நாடு மட்டும் இன்றி கேரளா, ஆந்திராவிலும் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது. தொடர்ந்து வெற்றி படங்கள் கொடுத்து வரும் விஜய் பற்றிய புத்தகம் ஒன்று விஜய் ஜெயித்த கதை என்ற பெயரில் கடந்த ஜனவரி மாதம் வெளியானது.இந்த புத்தகத்தை எழுத்தாளர் சபீதா ஜோசப் என்பவரால் எழுதப்பட்டது.

இந்நிலையில் நாளை நமதே எனும் புத்தகக் கண்காட்சி நெல்லையில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் சரித்திரம் படைத்த தலைவர்களின் புத்தகத்திற்கு மத்தியில் தளபதி விஜயின் திரையுலகப் பயணம் பற்றிய விஜய் ஜெயித்த கதை புத்தகம் வைக்கப்பட்டிருந்தது.இந்த புத்தகத்தில் நடிகர் விஜயின் 25 ஆண்டுகால திரையுலக பயணமான 1992ல் வெளியான நாளைய தீர்ப்பு படத்திலிருந்து சமீபத்தில் வெளியான மெர்சல் படம் வரை, அவர் கடந்து வந்த வெற்றி பயணத்தை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த புத்தகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் ஆர்வமாக இந்த புத்தகத்தை வாங்கி செல்வதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் விஜயின் 25 வருட சினிமா பயணத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடினர். இது விஜய் என்ற ஹேஷ்டேக்கில் இந்தியா முழுவதும் பேசப்படும் தலைப்பாக ஆனது.
இந்நிலையில் விஜயின் வெற்றி பயணம் பற்றிய புத்தகம் விற்பனையிலும் முன்னணியில் இருப்பதை அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*