Home » இந்தியா » மாலத்தீவு இந்தியர்க்கு முழு பாதுகாப்பு அளித்திடுக: வாசன்

மாலத்தீவு இந்தியர்க்கு முழு பாதுகாப்பு அளித்திடுக: வாசன்

சென்னை, பிப்.8: மாலத்தீவில் உள்ள இந்தியர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில் மத்திய. அரசு தொடர் நடவடிக்கை மூலம் உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை வைத்துள்ளார்.மாலத்தீவு – கடல் பகுதி வழியாக இந்தியா உட்பட பிற அண்டை நாடுகளுக்கு வியாபாரம் நடைபெற்று வருகிறது. நம் நாட்டின் தெற்கு கடற்கரைப் பகுதியில் இருந்து மாலத்தீவுக்கு குடியேறியவர்கள் ஏராளம்.

குறிப்பாக இப்போது மாலத்தீவில் சுமார் 25 ஆயிரம் இந்தியர்கள் வாழ்கிறார்கள். தற்போது மாலத்தீவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக அங்கு அவசர நிலை பிரகடணம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள இந்தியர்களுக்கு முழு பாதுகாப்பு கொடுக்க மத்திய அரசு தொடர் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*