Home » இந்தியா » நவீன வசதியுடன் செய்தியாளர் அறை: அமைச்சர் திறப்பு

நவீன வசதியுடன் செய்தியாளர் அறை: அமைச்சர் திறப்பு

புதுடெல்லி, பிப்.8: புதுடெல்லி,வைகை,தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்கள் மற்றும் ஊடக பிரதிநிதிகள் பயன்படுத்தும் வகையில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள செய்தியாளர் அறை, ஊடக அறையை அமைச்சர் கடம்பூர் ராஜு , புதுடெல்லி சிறப்பு பிரதிநிதி என். தளவாய் சுந்தரம் முன்னிலையில் திறந்து வைத்தார்.

புதுடெல்லியில் அமைக்கப் பட்டுள்ள செய்தியாளர்கள் மற்றும் ஊடகபிரதிநிதிகளின் அறைகளை அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்துசெய்தியாளர் களுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டத்தின் கீழ அமைச்சர் கடம்பூர் ராஜு தமிழ்நாட்டினை தலைமையிடமாக கொண்ட செய்தி மற்றும் ஊடக நிறுவனங்களிலிருந்து புதுடெல்லியில் பணிபுரியும் செய்தியாளர்கள், புகைப் படக்காரர்கள், ஒளிப்பதிவாளவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

செய்தியாளர் அடையாள அட்டைகளை அமைச்சர் வழங்க மூத்த பத்திரிகையாளர்கள் ஷபிமுன்னா மற்றும் சக்தி கந்தசாமி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.இந்தநிகழ்ச்சியில் தமிழ்நாடு அ ரசின் முதன்மை உள்ளுறை ஆணையர் ஜஸ்பீர் சிங் பஜாஜ், புதுடெல்லியில் பணிபுரியும் தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகளின் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் தமிழ்நாடு இல்ல அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*