Home » சென்னை » சென்னை குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு

சென்னை குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு

செங்குன்றம், பிப்.8: திருவள்ளூர் அருகே கண்ணன் கோட்டை பகுதியில் ஏரிகளை இணைத்து ரூ.330 கோடி மதிப்பில் புதிய அணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் சென்னை குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆந்திராவில் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் கிருஷ்ணாநதி நீரை, சத்தியவேடு கால்வாயில் இணைத்து நீரைசேமிக்க 2013-ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரூ.330 கோடி ஒதுக்கி கண்ணன் கோட்டை பகுதியில் 1485 ஏக்கர் நிலப்பரப்பில் நீர்தேக்கம் அமைக்கவும் தேர்வாய் கண்டிகை ஏரிகளை இணைத்து அணை கட்டவும் திட்டம் போட்டு பணி நடந்து வருகிறது.

மேலும் கண்ணன் கோட்டை நீர்தேக்கத்தில் கிருஷ்ணா நதிநீரை தேக்க 12 கிலோ மீட்டர் கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. இடையில் பொது மக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல 5 இடங்களில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.சீனி குப்பத்தில் கால்வாயின் குறுக்கே கால்வாயில் மதகு அமைக்கும் பணி நடக்கிறது. டிசம்பர் மாதத்திற்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை பொறியாளர் சிலம்பரசன் மற்றும் சத்தீஷ் தெரிவித்தனர்.

பணிகள் நிறைவேறினால் 1.50 டிஎம்சி தண்ணீரை சேமித்து தேவைப்படும் போது பூண்டி ஏரிக்கு அனுப்பி சென்னைக்கு குடிநீர் பிரச்சனைகளில் இருந்து நிரந்தர தீர்வு காணலாம் என்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*