Home » குற்றம் » விரிவுரையாளர் பணி முறைகேடு: 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது

விரிவுரையாளர் பணி முறைகேடு: 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சென்னை, பிப். 8: பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணி முறைகேட்டில் முக்கிய குற்றவாளி உட்பட 5 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். மதுரவாயல் பகுதியை சேர்ந்த ஷேக் தாவூத்(வயது 35) என்பவர் மீது மத்திய குற்றப்பிரிவில் முன்னரே வழக்கு உள்ளது.

இந்நிலையில் இவர் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணி முறைகேட்டில் முக்கிய குற்றவாளி என தெரியவந்துள்ளது. ரமேஷ்(வயது 25), கார்திக் (வயது 28), சரண்ராஜ்(வயது 36) மற்றும் அரவிந்தன் (வயது 24) ஆகியோரும் இதில் சம்பந்தபட்டுள்ளனர்.

இதில் அரவிந்தன் மீது கோட்டூர்புரத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. மற்றவர்கள் மீது வியாசர்பாடியில் கொலை வழக்கு உள்ளது. இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கமிஷனர் வி.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*