Home » இந்தியா » ஆந்திராவில் பந்த்

ஆந்திராவில் பந்த்

ஐதராபாத், பிப். 8: மத்திய பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு நிதி வழங்காததைக் கண்டித்து இன்று பந்த் நடைபெற்றது.
இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டில் ஆந்திராவிற்கு சிறப்பு நிதி ஒதுக்கப்படாததை கண்டித்து இடது சாரி கட்சிகள் இன்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.

இந்தப் போராட்டத்திற்கு கட்சிகள் அனைத்தும் ஆதரவு தெரிவித்து முழு அடைப்பில் பங்கேற்றன.முழு அடைப்பை முன்னிட்டு முன் ஜாக்கிரதை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்தது. 11,500 அரசு பஸ்கள் இயங்கவில்லை.
கடைகள், வணிக வளாகங்கள், பெட்ரோல் பங்குகள், திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் ஆந்திராவில் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*