Home » உலகம் » உணவு தந்தவரின் கைகளை கடித்து தின்ற புலிகள்

உணவு தந்தவரின் கைகளை கடித்து தின்ற புலிகள்

கவுத்தமாலா நகரம், பிப்.8:கவுதமாலா குடியரசு நாட்டில் சர்க்கஸ் புலிகள் உணவு வைக்க வந்த நபரின் கைகளை கடித்துத் தின்றன.

கவுதமாலாவில் உள்ள கிராமத்தில் சர்க்கஸ்காக அழைத்துவரப்பட்ட புலிகளுக்கு உணவும் நீரும் வைக்கும் பணியில் கிப்ரியானோ என்பவர் ஈடுபட்டிருந்தார். கூண்டுக்கு அருகில் சென்ற போது, புலிகள் அவரது கையைக் கடித்து தின்றன.

இதைக் கண்ட உள்ளூர் வாசிகள் புலிகளை கல்லால் அடித்தும், குச்சியால் தாக்கியும் கிப்ரியானோவை மீட்டனர். இரு கைகளும் துண்டிக்கப்பட்ட நிலையில், மீட்கப்பட்ட கிப்ரியானோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*