கேப்டவுன், பிப். 8: தென்னாப்ரிக்கா அணியின் கேப்டன் மார்க்ரமை தோனி நேற்று ஸ்டம்பிங் மூலம் வீழ்த்தினார். இதன் மூலம் புதிய மைல்கல்லை தோனி எட்டி உள்ளார்.
தோனி ஒருநாள் அரங்கில் 295 கேட்ச், 105 ஸ்டெம்பிங் என மொத்தமாக 400 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளார். ஒருநாள் அரங்கில் 400வது விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக விக்கெட் கீப்பர் என்ற பெருமை பெற்றார்.
தவிர, இம்மைல்கல்லை எட்டிய முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனை படைத்தார். இப்பட்டியலில் இலங்கையின் சங்ககரா (482 விக்கெட்), ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் (472 விக்கெட்), தென் ஆப்ரிக்காவின் மார்க் பவுச்சர் ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.