Home » Flash News » மாணவர்களுக்கு விபத்து காப்பீடு:அமைச்சர்

மாணவர்களுக்கு விபத்து காப்பீடு:அமைச்சர்

சென்னை, பிப்.8:நாட்டிலேயே மாணவர்களுக்கு முதல் முறையாக விபத்து காப்பீட்டு திட்டம் அமல்படுத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்து உள்ளார்.

வரும் கல்வியாண்டில் 10 லட்சம் மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத இருப்பதாகவும் அவர் கூறினார்.10-ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன் தலைமையில் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

நாட்டிலேயே முதல் முறையாக மாணவர்களுக்கு விபத்து காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்ப டும். விபத்தில் உயிரிழக்கும் மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும். படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000-ம், சிறிய காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25,000-ம் வழங்கப்படும்.

சம்பவம் நடைபெற்ற 48 மணி நேரத்தில் இந்த உதவி தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட கலெக்டர், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோர் ஆய்வு நடத்தி இதற்கான ஏற்பாடுகளை செய்வார்கள்.

இந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 10 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தில் 35,560 தேர்வு மையங்களும், புதுவையில் 48 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 8,61,913 மாணவர்களும், 12-ம் வகுப்பில் 8,61,934 மாணவர்களும் தேர்வு எழுதுகின்றனர். வரும் 2 ஆண்டுகளில் புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். சிபிஎஸ்இ-க்கு இணையாக கல்வித்தரம் இருக்கும். இதன் மூலம் தமிழக மாணவர்கள் எந்த நுழைவு தேர்வையும் எதிர்கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*