Home » குற்றம் » நூதன வழிப்பறி: 3 பேர் கைது

நூதன வழிப்பறி: 3 பேர் கைது

சென்னை, பிப்.8: சென்னை, வளசரவாக்கம், கோட்டூர்புரம் உட்பட பல்வேறு இடங்களில் வங்கி அல்லது ஏடிஎம்-களில் பணம் எடுத்து செல்வோர் மீது அரிப்பு பொடி தூவி வழிப்பறி ஈடுபட்டதாக புகார்கள் குவிந்தன. கடந்த ஒரு வருடங்களாக இதுபோன்ற நூதன வழிப்பறி சம்பவங்கள் நடந்தேறிவந்தன.

இதுகுறித்த புகார்களின் பேரில், தி.நகர் துணை கமிஷனர் அரவிந்தன் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், மணலி பகுதியில் இதேபோன்ற சம்பவம் நடந்ததற்கான வீடியோ பதிவை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இதனடிப்படையில், வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த விமல் (வயது 40), பெஞ்சமின் (வயது 31) உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 8 லட்சம் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*