Home » விளையாட்டு » ஐஎஸ்எல்: சென்னையை வீழ்த்தியது பெங்களுரு

ஐஎஸ்எல்: சென்னையை வீழ்த்தியது பெங்களுரு

சென்னை, பிப். 7:இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பெங்களூரு எப்.சி. அணி 3-1 என்ற கணக்கில் சென்னை எப்.சி. அணியை வீழ்த்தியது.

10 அணிகள் இடையிலான 4வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நேற்று சென்னையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை எப்.சி. மற்றும் பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் பெங்களூரு அணி சார்பில் 2வது நிமிடத்தில் ஹாகிபும், 63வது நிமிடத்தில் மிகுவும், 90வது நிமிடத்தில் சுனில் சேத்தி ஒரு கோலும் அடித்தனர்.

சென்னை எப்.சி. அணியின் சார்பில் பிரான்சிஸ் பெர்னாண்டஸ் 33வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, இந்த போட்டியில் பெங்களூரு அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து பெங்களூரு எப் சி அணி 30 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*