மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=23366
Export date: Thu Jan 17 9:55:20 2019 / +0000 GMT

அதிமுகவில் தொடரும் அதிரடி நடவடிக்கை


சென்னை, பிப்.7:திருநெல்வேலி மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 68 அதிமுகவினரை அதிரடியாக நீக்கி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனி சாமி உத்தரவிட்டுள்ளனர்.இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அதிமுகவின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடு களுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் திருநெல்வேலி மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட துணை செயலாளர் வி.பி.ஈஸ்வரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளரும் மானூர் தெற்கு ஒன்றிய செயலாளருமான கல்லூர் இ.வேலாயுதம், புளியங்குடி நகரச் செயலாளர் எம்.சங்கரபாண்டியன், பண்பொழி பேரூராட்சி செயலாளர் எம்.எஸ். பரமசிவன், சிவகிரி பேரூராட்சி செயலாளர் வி.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 68 பேரும் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

கட்சியினர் யாரும் இவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என கட்சி ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
Post date: 2018-02-07 11:03:36
Post date GMT: 2018-02-07 11:03:36

Post modified date: 2018-02-07 11:03:36
Post modified date GMT: 2018-02-07 11:03:36

Export date: Thu Jan 17 9:55:20 2019 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com