மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=23363
Export date: Sun May 27 17:43:27 2018 / +0000 GMT

ஓசிஎப் தொழிற்சாலை மூடுவதை கைவிடுக:வாசன்


சென்னை, பிப்.7:மத்திய பா.ஜ.க. அரசு - ஆவடி ஓசிஎப்-தொழிற்சாலையை மூடப் போவதாக எடுத்திருக்கும் முடிவை மறு பரிசீலனை செய்து - தொழிற்சாலையை தொடர்ந்து இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே. வாசன் கோரிக்கை வைத்துள்ளார்.

ஆவடி ஓசிஎப் தொழிற்சாலையில் சுமார் 2,500 பேர் பணிபுரிந்து தரமான உடைகளை தயாரித்து வருகின்ற வேலையில், ஏப்ரல் மாதத்தில் மூடுவது தொடர்பாக மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு மிகவும் கண்டிக்கத்தக்கது. இதன் மூலம் அங்கு பணியாற்றும்தொழிலாளர்கள் குடும்ப சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.

எனவே மத்திய அரசு ஓசிஎப் - தொழிற்சாலையை மூடப்போவதாக எடுத்திருக்கும் முடிவை மறு பரிசீலனை செய்து - தொழிற்சாலையை தொடர்ந்து இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு வாசன் கூறியுள்ளார்.
Post date: 2018-02-07 10:57:59
Post date GMT: 2018-02-07 10:57:59

Post modified date: 2018-02-07 10:57:59
Post modified date GMT: 2018-02-07 10:57:59

Export date: Sun May 27 17:43:27 2018 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com