Home » குற்றம் » மயிலாப்பூர்: 5 சவரன் நகை வழிப்பறி

மயிலாப்பூர்: 5 சவரன் நகை வழிப்பறி

சென்னை, பிப்.7:மயிலாப்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சாலையில் நடந்து சென்ற நபரிடமிருந்து 5 சவரன் நகையை வழிப்பறி செய்து தப்பியோடினர்.

மயிலாப்பூர் தீன சேனா கார்டன் பகுதியில் வசித்துவருபவர் மனோகரன் (வயது 58). இவர் நேற்றிரவு 11 மணியளவில் வடபழனியிலுள்ள தனது நண்பரை சந்தித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். ஆழ்வார்பேட்டை அருகே இந்தாணி அம்மாள் தெருவில் நடந்து சென்றபோது, அவ்வழியாக இரண்டு பைக்குகளில் வந்த 4 பேர் மனோகரனை இடித்து கீழே தள்ளியுள்ளனர்.

அவருக்கு உதவி செய்வதுபோல் பாவனை காண்பித்து கத்தியை காட்டி மிரட்டி மனோகரன் அணிந்திருந்த 4 சவரன் செயின், 1 சவரன் மோதிரம், வாட்ச், கிரெடிட் கார்டு உள்ளிட்டவற்றை வழிப்பறி செய்து தப்பியோடினர். இது குறித்த புகாரின்பேரில் மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*