Home » குற்றம் » அழுக்குகுமார் கொலை:கைதானவர் வாக்குமூலம்

அழுக்குகுமார் கொலை:கைதானவர் வாக்குமூலம்

சென்னை, பிப்.7:கே.கே.நகர் பிளாட்பாரத்தில்நேற்று குப்பை பொறுக்கும் அழுக்கு குமார் என்ற ஜெயக்குமார் தலையில் கல்லை போட்டுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இந்த கொலை தொடர்பாக கேகேநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பரமேஸ்வரன் (வயது 50) என்பவரை கைது செய்தனர்.

கைதான பரமேஸ்வரன் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-இந்த பகுதியில் பாட்டில்களை பொருக்கி வருகிறேன். சம்பவத்தன்று ரூ. 600க்கு பாட்டீல்களை விற்றேன்.அப்போது அழுக்கு குமார் என்னிடம் சரக்கு வாங்கி தரும்படி கேட்டான்.வாங்கிகொடுத்தேன். மேலும் வாங்கி கொடுக்க சொல்லி என்னிடம் தகராறு செய்தார். அப்போது ஆத்திரத்தில் பிளாட்பாரத்தில் கிடந்த கல்லை எடுத்து தலையில்போட்டு கொலை செய்தேன். இவ்வாறு தனது வாக்குமூலத்தில்கூறியுள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*