Home » குற்றம் » எம்எல்ஏவின் கையாளாக செயல்பட்ட நாதுராம்

எம்எல்ஏவின் கையாளாக செயல்பட்ட நாதுராம்

சென்னை, பிப்.7:நகைக்கடை கொள்ளையன் நாதுராம் அரசியல்வாதியாக மாறும் எண்ணத்தில் சுயேட்சை எம்எல்ஏ ஒருவரின் கையாளாக செயல்பட்டது தெரியவந்துள்ளது.

கொளத்தூரில் மகாலட்சுமி ஜூவல்லரி என்ற நகைக்கடை வைத்திருந்த முகேஷ்குமாரை குறிவைத்து அவர் கொள்ளையடித்தது பற்றியும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

2017 நவம்பர் 16-ல் கொளத்தூர் நகைக்கடையில் 3.5 கிலோ தங்கம் மற்றும் வெள்ளிகளை கொள்ளை யடித்ததில் நாதுராம் மூளையாக செயல்பட்டுள்ளான். நகைக்கடையின் அதிபர் முகேஷ்குமாரும், நாதுராமும், ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட் டத்தை சேர்ந்தவர்கள்.

இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றி வருகிறார்கள். சொந்த கிராமத்தில் திருவிழா நடைபெறும் போது அனைவரும் ஒன்று கூடுவார்கள். அப்போது நகைக்கடை அதிபர் முகேஷ்குமார் அதிக அளவில் பணம் செலவிடுவதை நாதுராம் நோட்டம் விட்டதாக கூறப்படுகிறது.

ராஜஸ்தானைச் சேர்ந்த பக்தராம் என்பவர் சென்னையில் வசித்து வருபவர் ஆவார். இவருடன் நாதுராம் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு அவருடன் முகேஷ்குமாருடன் பேசி நகைக்கடையின் மேல் தளத்தை வாடகைக்கு பிடித்ததாக கூறப்படுகிறது.துணிக்கடை வைப்பதற்காக வாடகைக்கு இடம்பிடித்து மேல் தளத்தில் ஓட்டை போட்டு நகைக்கொள்ளை யில் ஈடுபட்டு உள்ளான். கொள்ளை யடித்த நகைகளை பெங்களூரிலும், சௌகார்பேட்டையிலும் விற்பனை செய்துள்ளான்.

சென்னையில் மட்டுமின்றி கர்நாடகம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும் நாதுராம் கோஷ்டியினர் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
2014-ல் மாதவரத்தில் செல்போன் கடையில் நடந்த கொள்ளையிலும் நாதுராம் சம்பந்தப்பட்டு இருக்கிறார். பெங்களூரில் 8 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துள்ளான்.

போலீசிடம் பிடிபடும்போது குற்றத்தை ஒப்புக்கொள்வதும், பின்னர் தப்பிவிடுவதும் இவனது வழக்கமாக இருந்திருக்கிறது. ஜனவரி 18-ந் தேதி குஜராத்தில் பிடிபட்டபோதும் குற்றத்தை ஒப்புக்கொண்டான். கொள்ளை தொடர்பான சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர் பாகவும் இவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே நாதுராமின் ஆசை அரசியல்வாதியாக மாற வேண்டும் என்பதுதான் என்றும் இதற்காக ராஜஸ்தானை சேர்ந்த சுயேட்சை எம்எல்ஏ ஒருவரின் கையாளாக மாறி செயல்பட்டு வந்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*