Home » சினிமா » ரஜினியின் காலா படம் முன்கூட்டியே ரிலீசா?

ரஜினியின் காலா படம் முன்கூட்டியே ரிலீசா?

சென்னை, பிப்.7:ரஜினியின் 2.0 படம் வெளியாவதற்கு முன்பே காலா படம் வெளியாகும் என்று வெளியாகி உள்ள செய்திகளை தயாரிப்பாளர் தரப்பில் மறுத்ததுடன் எப்போது வெளியாகும் என்பதை உறுதிபடுத்தவும் மறுத்துவிட்டனர்.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷ்சயகுமார், எமிஜாக்சன் நடிப்பில் உருவாகி உள்ள படம் 2.0. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து கிராபிக்ஸ், டப்பிங் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. முதலில் ஜனவரி 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பணிகள் தாமதமாக நடப்பதால் ரிலீஸ் தேதியை ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைத்தனர்.

இதனிடையே கபாலி படத்தை தொடர்ந்து இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் காலா படத்தில் ரஜினி நடித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பை மற்றும் சென்னையில் வேகமாக நடைபெற்று நிறைவடைந்தது. கடந்த மாதம் இந்த படத்தின் டப்பிங் பணிகளும் தொடங்கின. இதனால் 2.0 படத்திற்கு முன்னதாக காலா படம் வெளியாகலாம் என பேசப்பட்டன. ஆனால் இந்த தகவலை ரஜினி திட்டவட்டமாக மறுத்தார்.

2.0 படம் வெளியான பிறகுதான் காலா படம் ரிலீஸ் செய்யப்படும் என தெரிவித்திருந்தார். இதனிடையே இன்றைய ஆங்கில காலை நாளிதழில் 2.0 வெளியீட்டிற்கு முன்பாக காலா படம் ரிலீசாகிறது என செய்தி வெளியாகி இருந்தது.

இது குறித்து தயாரிப்பாளர் தனுஷ் தரப்பிடம் விசாரித்த போது இந்த செய்தியை மறுத்ததுடன் 2 படங்களின் இறுதி கட்டப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. முதலில் எந்த படம் வெளியாகும் என்பதை இப்போது öõசல்ல முடியாது. 2.0 படம் தள்ளிப்போகிறது என லைகா நிறுவனமும் அறிவிக்கவில்லை. காலா படம் முன்கூட்டியே வெளியாகிறது என்று நாங்களும் கூறவில்லை. எனவே இந்த செய்தியில் உண்மை இல்லை என்று தெரிவித்தனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*