Home » உலகம் » மாலத்தீவில் அரசியல் பதட்ட நிலை நீடிப்பு

மாலத்தீவில் அரசியல் பதட்ட நிலை நீடிப்பு

மாலே, பிப்.7:மாலத்தீவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதை தொடர்ந்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் தனது உத்தரவுகளை வாபஸ் பெற்றுக்கொண்டது.

சிறையில் இருக்கும் 9 எதிர்க்கட்சி தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக 3 நீதிபதி களைக்கொண்ட உச்சநீதிமன்றம் நேற்றிரவு அறிவித்தது.

இந்திய பெருங்கடலில் உள்ள இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவில் எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அடைக்கப்பட்டுள்ள தலைவர்கள் 9 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று 2 நாட் களுக்கு முன் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை ஏற்க அதிபர் அப்துல்லா யாமின் மறுத்தது மட்டுமின்றி 15 நாட்களுக்கு அவசர நிலையை பிரகடனம் செய்தார். உச்சநீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற உத்தரவு ரத்து செய்யப்படுவதாக நேற்றிரவு மாலத்தீவு உச்சநீதிமன்றம் அறிவித் தது.மாலத்தீவு நிலவரத்தை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. நிலைமை சீராகும் வரை அங்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என்று வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

மாலத்தீவு விவகாரத்தில் இந்தியா தலையிட முடிவெடுத்தால் அடுத்த சில மணி நேரத்தில் போர்க்கப்பல் கள், விமானங்கள் மற்றும் ராணுவத் தின் தரைப்படையால் மாலத்தீவை முற்றுகையிட முடியும்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*