Home » இந்தியா » டீ, பிஸ்கட்டுக்கு ரூ.68 லட்சம் செலவு

டீ, பிஸ்கட்டுக்கு ரூ.68 லட்சம் செலவு

டேராடூன், பிப்.7:பிஜேபி ஆட்சி நடைபெறும் உத்தரகாண்ட் மாநிலத்தில் முதலமைச்சர் திரிவேந்திரா சிங் ரவாத் மற்றும் அவரது அமைச்சர் கள் கடந்த 9 மாதங்களில் டீ, பிஸ்கட் மற்றும் நொறுக்கு தீனி வகைகளுக்காக ரூ.68 லட்சம் செலவு செய்துள்ளனர்.

இந்த செலவு தொகை மிக அதிகம் என்று பிஜேபி தலைவர்களே குற்றஞ்சாட்டுகின்றனர். இருப்பினும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் வருகை தரும் முக்கிய பிரமுகர்களுக்கான செலவும் இதில் அடங்கும் என்று மாநில அரசு விளக்கம் அளித்து உள்ளது.

உத்தரகாண்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் பிஜேபி அமோக வெற்றி பெற்று திரிவேந்திரா முதலமைச்சராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*