Home » உலகம் » தைவானில் நிலநடுக்கம்: 2 பேர் பலி

தைவானில் நிலநடுக்கம்: 2 பேர் பலி

தைபே, பிப்.7:தைவான் நாட்டில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 100-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தைவான் நாட்டின் வட கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று 6.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடற்கரை நகரமான ஹுவாலியனில் இருந்து வடக்கு திசையில் சுமார் 14 கிலோமீட்டர் தொலைவிலும், கடலுக்கடியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் ஹுவாலியன் நகரில் உள்ள ஓட்டல் உள்பட பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ஓட்டல் இடிபாடுகளில் சிக்கி 2 பேர் பலியாகினர். மேலும் 114 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*