மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்
http://www.maalaisudar.com/?p=23321
Export date: Sun Sep 23 9:11:09 2018 / +0000 GMT

உலகின் மிகப்பெரிய ராக்கெட் விண்ணுக்கு ஏவப்பட்டது


நியூயார்க், பிப்.7:உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த பெரிய ராக்கெட் அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து விண்ணுக்கு நேற்று ஏவப்பட்டது. 24 என்ஜின்கள் பொருத்தப்பட்ட இந்த ராக்கெட் 747 ரக ஜெட் விமானங்கள் 18க்கு சமமானவை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வானில் மிகப்பெரிய புகை மண்டலத்தை மலைபோல் உருவாக்கிக்கொண்டு இடிமுழக்கத் துடன் புறப்பட்ட இந்த ராக்கெட்டை ஆயிரக்கணக்கானோர் கூடிநின்று பார்த்தனர். புளோரிடா முழுவதும் இடியோசை போல் பெரிய அளவில் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. செவ்வாய் கிரகத்திற்கு மிக அருகாமையில் இந்த ராக்கெட்
சென்று கொண்டிருப்பதாக கடைசி யாக கிடைத்த தகவல் கூறுகிறது.

இந்த ராக்கெட் மூலம் பெண்டகான் தேசிய பாதுகாப்புக்காக செயற்கை கோள்களை விண்ணில் அனுப்ப முடியும் என்று ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனத்தின் அதிகாரி கள் கூறுகின்றனர்.

தனியார் பங்களிப்புடன் செயல்படும் இந்த விண்வெளி நிறுவனம் இந்த ஆண்டில் விண்வெளிக்கு மனிதர் களை சுற்றுலாவுக்கு அனுப்பவும் திட்டமிட்டுள்ளது.
Post date: 2018-02-07 09:50:31
Post date GMT: 2018-02-07 09:50:31

Post modified date: 2018-02-07 09:50:31
Post modified date GMT: 2018-02-07 09:50:31

Export date: Sun Sep 23 9:11:09 2018 / +0000 GMT
This page was exported from மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் [ http://www.maalaisudar.com ]
Export of Post and Page has been powered by [ Universal Post Manager ] plugin from www.ProfProjects.com