Home » Flash News » தினகரன் மீது ஜெயக்குமார் தாக்கு

தினகரன் மீது ஜெயக்குமார் தாக்கு

சென்னை, பிப்7:அதிமுக அரசு வலிமையாக உள்ளது. எவராலும் ஆட்சியை ஒன்றும் செய்ய முடியாது தினகரன் வெளியில் சிரித்து உள்ளே அழுது பேசிக்கொண்டு இருக்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நேற்று முன் தினம் தஞ்சை, கதிராமங்கலத்தில் தினகரன் பேசும்போது, ’ இப்போது ஆட்சியில் உள்ள ஆறு பேரைத் தவிர யார் வந்தாலும் எங்கள் அணியில் சேர்த்துக் கொள்வோம். தகுதிநீக்கத்துக்கு ஆளான 18 பேரில் ஒருவரை முதல்வராக்குவோம்’ எனப் பேசினார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது; தினகரன் திரைக்கதை போல மேடைகளில் பேசி வருகிறார்.

கூட்டணிக்காக அவர் போடும் நாடகம் இது அரங்கேறது. உள்ளுக்குள் அழுது கொண்டு வெளியே சிரித்தமுகத்துடன் அவர் பேசிகிறார். தமிழக அரசு வலிமையாக உள்ளது எவராலும் ஒன்றும் செய்ய முடியாது. கூடா நட்பு கேடாய் முடியும் என்பது அவருக்கு தான் பொருந்தும். ஆர்கே நகரில் ரூ20 நோட்டை காட்டி வெற்றி பெற்றுவிட்டார்.

அவரை நம்பி ஒட்டுப் போட்டவர்கள் அவரை தேடிக்கொண்டு இருக்கின்றனர். இது போன்ற வெற்றி நிலைக்காது. திமுக உடன் அவர் ரகசியமாக தொடர்பு வைத்திருக்கிறார். ஒரு போதும் அதிமுகவில் சசிகலா , தினகரன் மற்றும் அவரது உறவினர்களுக்கு வாய்ப்பு அளிக்கபடாது. முரண்பாடுகளின் மொத்த உருவமாக அவர் திகழ்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*